Last Updated:
சிறுவர்களை மலைக்க வைக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர்மேன் காமிக்ஸ் வகை புத்தக வரிசையில் முதன் முதலாக வெளியான இந்த புத்தகம் 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
சிறுவர்களை மலைக்க வைக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர்மேன் காமிக்ஸ் வகை புத்தக வரிசையில் முதன் முதலாக வெளியான இந்த புத்தகம் 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சகோதரர்கள் மூன்று பேர் தங்களது மறைந்த தாயாரின் அறையை கடந்த ஆண்டு சுத்தம் செய்தபோது சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை கண்டெடுத்தனர். இது, சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் சாகசங்கள் குறித்த 1939 ஆம் ஆண்டு வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டெக்சாஸ் நகரில் ஹெரிடேஜ் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் இந்த புத்தகம் இந்திய மதிப்பில் 81 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில், அந்த மூன்று சகோதரர்களும் வாங்கிய காமிக்ஸ் புத்தகத்தை அவர்களது தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாகவும், இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளதாகவும் ஹெரிடேஜ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 86 ஆண்டுகள் பழமையான இந்த புத்தகம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
November 25, 2025 9:52 PM IST
[]
Source link







