Last Updated:
நடிகரும், கார் ரேசருமான அஜித்குமாருக்கு வெனிஸில் நடந்த விழாவில், ‘Gentleman Driver of the Year’ விருது வழங்கி SRO Motor sport கௌரவித்துள்ளது.
நடிகரும், கார் ரேசருமான அஜித்குமாருக்கு வெனிஸில் நடந்த விழாவில், ‘Gentleman Driver of the Year’ விருது வழங்கி SRO Motor sport கௌரவித்துள்ளது.
அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டு ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர், கார் ரேஸ், துப்பாக்கி பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் சினிமாவுக்கு திரும்ப இருக்கிறார். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வெனிஸில் நடைப்பெற்ற விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் தனது குடும்பத்துடன் அஜித் கலந்துகொண்டார். மேலும் தனது கணவர் விருது வாங்கியதை தொடர்ந்து, ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், “எனது கணவரின் அருகில் நிற்பதில் பெருமை அடைகிறேன். அவருக்கு 2025 ஆம் ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது” என பதிவு செய்துள்ளார்.
November 23, 2025 10:40 AM IST
[]
Source link







