ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் – ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம் | one rupee travel introduced on the Chennai One app

Spread the love


சென்னை: ‘சென்னை ஒன்’ செயலி​யில் தலா ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி, மெட்​ரோ, மாநகர பஸ், ரயி​லில் ஒரு முறை சலுகை பயணம் செய்​யும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில், மின்​சார ரயில், மெட்​ரோ, மாநகர பேருந்​து, ஆட்​டோ, டாக்​சிகளில் பயணிக்க வசதி​யாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்​.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்​தது.

இந்த செயலி​யில் அனைத்து பொது​போக்​கு​வரத்து பயணத்​துக்​கான டிக்​கெட் பெறும் வசதி இருப்​ப​தால், பயணி​களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. இது​வரை​யில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தினசரி பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

ஒரு டிக்​கெட்​டுக்கு ஒரு முறை: இந்​நிலை​யில், இந்த செயலியை ஊக்​குவிக்​கும் வகை​யில், புதிய சலுகை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிஎச்​ஐஎம் எனப்​படும் பீம் மற்​றும் நேவி செயலியை பயன்​படுத்தி யுபிஐ வாயி​லாக பணம் செலுத்​து​வோர், சென்னை மெட்ரோ ரயில் மற்​றும் மாநகர பேருந்​துகளின் முதல் டிக்​கெட்டை ஒரு ரூபாய் மட்​டுமே செலுத்தி முதல் பயணம் செய்ய முடி​யும்.

அதாவது, விமான நிலை​யத்​தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயி​லில் செல்​வதற்கு ரூ.40 கட்​ட​ணம். செயலி​யில் ரூ. 32-ல் டிக்​கெட் புக்​கிங் செய்​ய​லாம். ஆனால், சென்னை ஒன்று செயலியை பயன்​படுத்தி ‘பீம் மற்​றும் நேவி’ செயலிகள் வாயி​லாக டிக்​கெட் எடுத்​தால் ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி​னால் மட்​டும் போதும். இதே போல, மாநகர் பேருந்​துகளில் டிக்​கெட் எடுப்​பவர்​களுக்​கும் இது பொருந்​தும்.

மின்​சார ரயி​லில் பயணிப்​பவர்​களும் இந்த சலுகையை பயன்​படுத்த முடி​யும். ஆனால், இந்த சலுகை ஒரு டிக்​கெட்​டுக்கு ஒரு முறை மட்​டும் தான் கிடைக்​கும். இந்த சலுகை நேற்று முதல்​ நடை​முறைக்​கு வந்​துள்​ளது.





Source link


Spread the love
  • Related Posts

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Bihar Election 2025 News18 Exit Poll Result : முந்தும் என்.டி.ஏ; பின்தங்கிய மகாகத்பந்தன்! 243 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவு | இந்தியா

    Spread the love

    Spread the love      Last Updated:November 11, 2025 7:36 PM IST Bihar Election 2025 Exit Poll Result CNN News18 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 140 – 150 வரை கிடைக்க வாய்ப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *