Last Updated:
Bihar Election 2025 Exit Poll Result CNN News18 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 140 – 150 வரை கிடைக்க வாய்ப்பு எனத் தெரியவந்துள்ளது.
பிகார் மாநிலத்தில் உள்ள மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், கடந்த 6ஆம் தேதி 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கும், இன்று (11ஆம் தேதி) 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
முதற்கட்ட வாக்குப் பதிவில், பிகார் மாநிலத்தின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகார் சட்டமன்றத்தில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
பாஜக : 101
ஐ.ஜ.த : 101
எல்.ஜெ.பி. (ராம்விலாஸ்) : 29
ராஷ்டிரிய லோக் மோர்சா : 6
ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா : 6
ஆர்.ஜே.டி : 143
காங்கிரஸ் : 61
சிபிஐ : 9
சிபிஐ (எம்) : 4
சிபிஐ (எம்.எல்.) : 20
வி.ஐ.பி. : 15
ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை.
| டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு | தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி | 142 – 145 |
| மகாகத்பந்தன் கூட்டணி | 88 – 91 |
| ஜன் சுராஜ் கட்சி | 00 |
| மற்றவை | 00 |
| பி-மார்க் கருத்துக்கணிப்பு | தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி | 142 – 162 |
| மகாகத்பந்தன் கூட்டணி | 80 – 98 |
| ஜன் சுராஜ் கட்சி | 1 – 4 |
| மற்றவை | 0 – 3 |
| CNN News18 கருத்துக்கணிப்பு | தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி | 140 – 150 |
| மகாகத்பந்தன் கூட்டணி | 85 – 95 |
| ஜன் சுராஜ் கட்சி | 0 – 5 |
| மற்றவை | 5 – 10 |
| Peoples Pulse கருத்துக்கணிப்பு | தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி | 133 – 159 |
| மகாகத்பந்தன் கூட்டணி | 75 – 101 |
| ஜன் சுராஜ் கட்சி | 0 – 5 |
| மற்றவை | 2 – 8 |
| MATRIZE கருத்துக்கணிப்பு : | தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி | 147 – 159 |
| மகாகத்பந்தன் கூட்டணி | 70 – 90 |
| ஜன் சுராஜ் கட்சி | 0 – 2 |
| மற்றவை | 0 – 5 |
November 11, 2025 7:36 PM IST
Bihar Election 2025 News18 Exit Poll Result : முந்தும் என்.டி.ஏ; பின்தங்கிய மகாகத்பந்தன்! 243 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவு
[]
Source link




