
Last Updated:
விஜய் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சியில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் கூட்டம் தடுப்புகளைத் தாண்டி நுழைந்தது. பவுன்சர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்பார். மாலை 6:24 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் விஜய் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று பார்வையிட்டு ஏற்பாடுகளையும் செய்துவந்தார். இந்நிலையில், நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒய்.எம்.சி.ஏ அரங்கத்திற்கு இன்று மாலை சுமார் 5.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள தவெக தலைவர் விஜய், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தலையில் தொப்பியுடன் வந்தார்.
இதையும் படியுங்கள் : Seeman | சீமான் வீட்டுப் பணியாளர், பாதுகாவலர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு: மார்ச் 10-ம் தேதி விசாரணை?
தவெக சார்பில் நடைபெறும் இந்த நோன்பு நிகழ்ச்சியில், கட்சி கொடி உள்ளிட்ட அடையாளங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அரங்கினுள் அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இளைஞர்கள் பலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளைத் தாண்டி குதித்து நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் விஜய் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி…
தடுப்பு வேலிகளை தாண்டி
வளாகத்திற்குள் நுழைந்த கூட்டம் #Vijay #TVK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/suv41Xmg3G— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 7, 2025
அவர்களை அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பவுன்சர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அரங்கம் முழுக்க நிறைந்ததால், அழைப்பிதழோடு வந்தவர்களும் கூட அரங்கத்தின் வெளியே காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
March 07, 2025 6:20 PM IST