
Last Updated:
மலைக்கு போன ஒருவரின் கூடாரத்தை சிங்கங்கள் சுற்றிய வீடியோ வைரல். @manav.brijwaasi இன் இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பார்வைகள். பயமூட்டும் காட்சி.
இப்போ எல்லாரும் மலை ஏறணும், அங்க போய் ஊர் சுத்தணும்னு ஆசைப்படுறாங்க. ஒரு சின்ன பையை தூக்கிட்டு, கேமராவுல படம் பிடிக்கிறதுக்காக மலை மேல போறாங்க. ஆனா, மலைன்னா சும்மா ஜாலியா இருக்கற மாதிரி இல்ல. அங்க நிறைய கஷ்டங்களும் இருக்கு. அந்த மலைகள்ல வாழற மக்களுக்கு எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியும். ஆனா, வெளியில இருந்து போறவங்களுக்கு அது புரியாது. சமீபத்துல ஒருத்தர் மலைக்கு போயி, கூடாரம் போட்டு தூங்கி இருக்காரு. ஆனா, காலையில எழுந்து பார்த்தா அவர் கூடாரத்தின் முன் தெரிந்த காட்சிகள் அவருக்கு பெரும் திகிலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தோட வீடியோ இன்ஸ்டாகிராம்ல பயங்கரமா பரவிடுச்சு. @manav.brijwaasi அப்படின்னு ஒருத்தர் போட்டிருந்த அந்த வீடியோல, ஒருத்தர் கூடாரத்துக்குள்ள தூங்கிட்டு இருக்காரு. திடீர்னு விழிச்சு பார்த்தா, கூடாரத்துக்கு வெளியே ரெண்டு சிங்கங்கள் சுத்திட்டு இருக்கு! அவருக்கு தூக்கிவாரிப் போயிடுச்சு.
அந்த வீடியோவோட கேப்ஷன்ல, “நீங்க மலைக்கு போயி, இப்படி ஒரு சூழ்நிலையில மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவீங்க?”ன்னு கேட்டிருந்தாங்க. அந்த வீடியோல, சிங்கங்கள் ரெண்டும் கூடாரத்தை மோந்து பார்க்குற மாதிரியும், திரைச்சீலையை நக்கிப் பார்க்குற மாதிரியும் இருக்கு. அந்த வீடியோ எங்க எடுத்ததுன்னு தெரியல. ஆனா, பாக்குறதுக்கே பயங்கரமா இருக்கு.
இந்த வீடியோ இப்போ வைரல் ஆகிடுச்சு. 20 லட்சம் பேருக்கு மேல இதை பார்த்துருக்காங்க. நிறைய பேரு கமெண்ட்ஸ்லயும் தங்களோட கருத்துகளை பதிவு பண்ணி இருக்காங்க.
February 14, 2025 5:23 PM IST
[]
Source link