
ஆபாச கால் சென்டர் மூலம் 500க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை தொழில் செய்து வரும் 50 வயதான ஒருவர், தாம் கிரிப்டோ கரன்சி டிரேடிங்கில் மூன்றரை கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக, சென்னை சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்தார்.
தொழிலதிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் டேட்டிங் ஆப் மூலமும் பணத்தை இழந்தது அம்பலமானது.
தொடர் விசாரணையில் கொல்கத்தாவில் செயல்பட்ட கால் சென்டர் வாயிலாக டேட்டிங் ஆப் மூலம் பணக்காரர்களை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று, மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட மூவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு கால் சென்டர் அமைத்து, பெண்கள் மூலம் தொழிலதிபர்களை குறிவைத்து, ஆபாச சாட்டிங் செய்து, பின்னர் அவற்றை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டதை ஒப்புக்கொண்டனர்.
Source link