
Last Updated:
சாவா (Chhaava) படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அக்ஷய் கண்ணா, திவ்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் .
தொழில் முறையில் டாக்டராக இருந்து சினிமாவுக்கு வந்து நடிகராக மாறியவருக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விக்கி கவுசால். இவர் நடிகை கேத்தரினா கைஃபை காதலித்து திருமணம் முடித்தவர். தற்போது விக்கி கவுசால் நடிப்பில் ஹிந்தியில் சாவா (Chhaava) என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.
இந்த திரைப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சாம்பஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாம்பஜி மகாராஜாவாக விக்கி கவுசால் நடித்துள்ளார். நேற்று வெளியாகி உள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கவி கலாஷ் என்ற அரசவை கவிஞர் கேரக்டரில் வினித் குமார் சிங் நடித்துள்ளார். தொழில்முறையில் மருத்துவரான வினோத் குமார் சிங் கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இருப்பினும் அவருக்கு குறிப்பிடத் தகுந்த அளவு அவரது கேரக்டர் பேசப்படவில்லை. இந்த நிலையில் சாவா படத்தில் கவி கலாஷாக அவர் நடித்துள்ள கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கவி கலாஷ் கேரக்டருக்கு வினித் குமார் சிங் உயிர் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இந்த கேரக்டர் அவருக்கு மேலும் பல வாய்ப்புகளை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க – தோனி; ரோஹித் ஷர்மாவுடன் டோவினோ தாமஸ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்..!
சாவா படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அக்ஷய் கண்ணா, திவ்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் .
February 15, 2025 8:54 PM IST
[]
Source link