Last Updated:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. முன்பதிவுகள் அதிகமாக உள்ள காரணத்தினால் ரயில் பயணிகள் கவலை அடைந்தனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக , கூடுதலாக ஒரு பெட்டியையும் தெற்கு ரயில்வே இணைத்து வருகிறது. அதன்படி காரைக்குளம் – எர்ணாகுளம், திருவனந்தபுரம் – ராமேஸ்வரம், திருவனந்தபுரம் – மங்களூரு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரயில்களில் புக்கிங் அதிக அளவில் இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் பெட்டி இணைக்கப்படுகிறது. இதனால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயிலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில்களை பிடிக்க பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி இருக்கையில் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பது ரயில் பயணிகளுக்கு கூடுதலாக பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tirunelveli,Tirunelveli,Tamil Nadu
October 19, 2025 12:27 PM IST







