எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
தீபாவளி திருநாளின் போது விளக்குகள், மெழுகுவர்த்தி மற்றும் பட்டாசு போன்றவை பயன்படுத்தப்படுவதால் தீக்காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்களுடைய குழந்தைகள் தவறுதலாக சூடான மேற்பரப்புகளை தொடாமலும் அல்லது நெருப்பிற்கு அருகில் செல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
பட்டாசு வெடிக்கும் போது அவற்றை சரியான முறையில் கையாளாவிட்டால் மோசமான காயங்கள் ஏற்படலாம். அதிகமான சத்தம் காரணமாக செவித்திறன் இழப்பு அல்லது கண்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தீக்காயங்கள் போன்றவை உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே மேற்பார்வையின்றி குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை காரணமாக ஆஸ்துமா அல்லது பிற சுவாச பிரச்சனைகள் தீவிரமாகலாம். எனவே முடிந்தவரை அதிக புகை வரும் பட்டாசுகளை தவிர்க்கவும்.

ஒரு சில உணவுகள், நிறங்கள் அல்லது அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் காரணமாக குழந்தைகளுக்கு அலர்ஜி போன்றவை ஏற்படலாம். உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை தரும் எந்த பொருளையும் இந்தப் பண்டிக்கைக்கு வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்!
அளவுக்கு அதிகமாக இனிப்புகள் அல்லது கனமான உணவுகளை சாப்பிடுவதால் வயிறு வலி, வயிற்றுப்போக்கு அல்லது ஃபுட் பாய்சனிங் போன்றவை ஏற்படலாம். ஆகவே அளவாக குழந்தைகளுக்கு கொடுங்கள். நிறைய இனிப்பு செய்வோர், அதை அண்டைவீட்டாருக்கு பரிமாறி மகிழவும்.
பண்டிகை காலத்தில் அடிக்கடி வீட்டிற்கு வெளியே நேரத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் பூச்சி கடிக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை வரலாம். அதோடு கொசுக்கடி காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்கவும்.
தீபாவளியின் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள்:
*விளக்குகள், மெழுகுவர்த்தி, பட்டாசுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டும் என்று உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
*குழந்தைகள் நடமாட்டம் இல்லாத இடங்களில் விளக்குகளை ஏற்றி வைக்கவும்.
*குழந்தைகள் மீது எப்பொழுதும் உங்களுடைய கவனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
*எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். இதற்கு வீட்டில் பேண்டேஜ், ஆன்டிசெப்டிக் வைப்ஸ், சூத்திங் கிரீம்கள் மற்றும் ஆயின்மென்ட் அடங்கிய ஃபர்ஸ்ட் எய்ட் கிட் வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
*சிறிய அளவிலான காயங்கள் ஏற்படும் போது அடிப்படை முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*பட்டாசுகளை அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளிடமிருந்து மட்டுமே வாங்கவும்.
*உங்களுடைய மேற்பார்வை இல்லாமல் குழந்தைகளை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க வேண்டாம்.
*பட்டாசுகள் வெடிக்கும் போது அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் அல்லது மணல் கொட்டி வைக்கவும். தவறுதலாக விபத்து ஏற்பட்டு விட்டால் இதனை பயன்படுத்தி நீங்கள் தீயை அணைக்கலாம்.

*தீபாவளியின் போது வண்ண கோலங்கள் இடுவது ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் கோலப் பொடி ஆர்கானிக் பொருளாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். குழந்தைகள் கோலப்பொடியை கையாளும்போது தவறுதலாக முகம் அல்லது கண்களில் அவற்றை வைத்து விடக்கூடாது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
*உங்களுடைய குழந்தைகளுக்கு ஏதாவது உணவு சார்ந்த அலர்ஜி இருக்கும் பட்சத்தில் அந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
*உங்களுடைய குழந்தைக்கு ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனைகள் இருந்தால் பட்டாசிலிருந்து வெளிவரும் புகையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கு நீங்கள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிகரமானதாகவும், அதே சமயத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக நீங்களும் உங்களுடைய குழந்தைகளும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடலாம்.
October 17, 2025 4:40 PM IST
நெருங்கும் தீபாவளி… பட்டாசு வெடிக்கப்போகும் சுட்டிக் குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!
[]
Source link






