Last Updated:
ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜ் புதன்கிழமை நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜ் புதன்கிழமை நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார். தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டினார்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் முடித்துக் கொண்டதாக ஜாய் கிரிஸ்டில்டா சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
“கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
மேலும் மகளிர் ஆணையத்திலும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்த நிலையில், வரும் புதன்கிழமை மகளிர் ஆணையத்தில் இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக வேண்டுமான ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அதே நாளில் புகார் அளித்த பெண்ணும் ஆஜராக வேண்டும் என மகளிர் ஆணையம் சம்மன்
October 14, 2025 12:02 PM IST







