
Last Updated:
2025 மகா கும்பமேளாவில் புனித நீராட நீங்கள் பிரயாக்ராஜுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், அந்த நகரத்தின் 135 வருட பழமையான மற்றும் பாரம்பரியமான ஹரி ராம் & சன்ஸின் ஸ்னாக்ஸ்களை சுவைக்க மறக்காதீர்கள்.
நேரு, அமிதாப்பச்சனை ஈர்த்த 135 ஆண்டுகள் பழமையான சிற்றுண்டி கடை எங்குள்ளது தெரியுமா?. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், இவர்களின் சிற்றுண்டி வகைகளின் ரசிகராக இருந்திருக்கிறார். திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவை காண கோடிக்கணக்கான பக்தர்கள் அலகாபாத்தின் பிரயாக்ராஜில் கூடுவது வழக்கம். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. இந்த பிரசித்தி பெற்ற மகா கும்பமேளா தான் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடும் பிரம்மாண்ட திருவிழாவாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவடைகிறது. 2025 மகா கும்பமேளாவில் புனித நீராட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரயாக்ராஜுக்கு மக்கள் படையெடுப்பதால், அனைத்து விதமான போக்குவரத்துகளும் அங்கு முடங்கி இருக்கின்றன.
பிரயாக்ராஜ், திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமம்) புனித நதியில் நீராடுவதை தாண்டி, இன்னும் பல சிறப்புகளையும் கொண்டுள்ளது. உணவு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சொர்க்கமாகவும் பிரயாக்ராஜ் இருந்து வருகிறது. அந்த வகையில், நகரத்தின் தவிர்க்க முடியாத மற்றும் சுவையான ஸ்ட்ரீட் புட்ஸ் உங்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குவதோடு, உங்களை முழுமையாக உணர வைக்கும். அதிலும் குறிப்பாக, பிரயாக்ராஜின் புகழ்பெற்ற ஹரி ராம் & சன்ஸ், 135 வருட பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
பரபரப்பான லோக்நாத் காலியில் அமைந்துள்ள ஹரி ராம் & சன்ஸ், தலைமுறை தலைமுறையாக ஒரு புகழ்பெற்ற ஸ்னாக்ஸ் கடையாக தனித்து நிற்கிறது. 1890ஆம் ஆண்டு, மித்து லால் என்பவர் தனது தாத்தா ஹரி ராம் பூர்வாரின் நினைவாக இந்த கடையை ஆரம்பித்தார். தற்போது, இந்த கடை 135 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர்வாசிகளுக்கும், வெளியூர் மக்களுக்கும் பிடித்தமான ஒரு இடமாக இருந்து வருகிறது.
ஹரி ராம் & சன்ஸ் ஏன் ஸ்பெஷல்?
நம்கீன்கள் எனப்படும் உப்பால் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ் மற்றும் சிற்றுண்டிகளின் பெரிய லிஸ்டுடன் ஹரி ராம் & சன்ஸ் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்த கடையில் அனைத்து ஸ்நாக்குகளும் நெய்யைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகின்றன. அவர்களின் மெனுவில் குறிப்பாக சோட்டா மசாலா சமோசா மற்றும் படா சமோசா தான் தற்போது வரை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதுதவிர அவர்களின் கட்டா சென்னா, டால்மோத் மற்றும் தங்க நிற கஸ்தா கச்சோரிஸ் புதுமையான விருந்தாக இருக்கும்.
இதுதவிர, நம்கீன் சேவ், பாலக் நம்கீன், டம் ஆலு மற்றும் மூங் தால் போன்ற மற்ற பிற ஸ்னாக்ஸ்களும் அங்கு பிரபலமானதாக இருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, அலகாபாத்தில் இருந்த காலத்தில் அடிக்கடி இந்த கடைக்கு சென்று பார்வையிட்டார். பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனும் இந்தக் கடையின் ஸ்னாக்ஸ்களுக்கு ரசிகர் என்றும் கூறப்படுகிறது. எனவே, கும்பமேளாவின் ஆன்மீக பயணமும், ஹரி ராம் & சன்ஸின் ஸ்னாக்ஸ் வகைகளும் நிச்சயம் உங்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
February 01, 2025 12:05 PM IST
[]
Source link