
Last Updated:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 71 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசியமக்கள் சக்தி கூட்டணி 52 இடங்களை கைப்பற்றியுள்ளது. இரண்டாம் இடத்தில் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளது. அக்கட்சி 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை பொதுஜன பெருமுனா கட்சி வெறும் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
November 15, 2024 8:56 AM IST
[]
Source link