Swiggy மேலாளர் மீது தாக்குதல் – பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியீடு | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

நிறுவனத்திற்கு தெரியாமல் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிலிருந்து சில பொருட்கள் திருடபட்டுள்ளது.இவை அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.

சென்னை அம்பத்தூரில் செயல்பட்டுவரும் swiggy instamart நிறுவன மேலாளரை முன்னாள் ஊழியர்கள் இருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 2 பேரை தொழிற்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருமங்கலம் ரவுண்டு பில்டிங் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி . இவர் கடந்த 1 வருடமாக அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் swiggy instamart நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏஜஸ் ஆகிய  இருவரும் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள்  நிறுவனத்திற்கு தெரியாமல் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிலிருந்து சில பொருட்கள் திருடபட்டுள்ளது. இதுகுறித்து அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளை நிர்வாகம் ஆய்வு செய்து அதில் மேற்கண்ட இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து இருவரையும் நிறுவனத்தின் சார்பில் பணிநீக்கம் செய்து ஊதியத்தை பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் மேலாளரான புகழேந்தியை இருவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிடித்தம் செய்த ஊதியத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர் . இதற்கு நிறுவனத்தின் மேலாளர் புகழேந்தி மறுப்பு தெரிவித்து  என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் நீங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.தாக்குதலில் காயமடைந்த மேலாளர் புகழேந்தி வலி தாங்காமல்  அலறி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் புகழேந்திக்கு கை விரல் உடைக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் புகழேந்தி அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார்  அளித்து அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : கன்னியப்பன்



Source link


Spread the love
  • Related Posts

    பிசியோதெரபிக்கும் நீட் தேர்வு! உடனடியாக கைவிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்   | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      அக்கடிதத்தில், தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம், வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET)…


    Spread the love

    “தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்றே ஆளுநர் கூறியுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 20, 2026 12:44 PM IST தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு அறிக்கையை வாசிக்க மறுத்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். News18 2026ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *