
Last Updated:
நகைச்சுவை மன்னன் என்று அழைக்கப்படும் இந்த நடிகருக்கு, சமீப காலமாக அவரது படங்கள் வெற்றியை தரவில்லை. இருப்பினும், தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள ஒரு படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை மன்னன் என்று அழைக்கப்படும் இந்த நடிகருக்கு, சமீப காலமாக அவரது படங்கள் வெற்றியை தரவில்லை. இருப்பினும், தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள ஒரு படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த நடிகர் யார் தெரியுமா?.
3 இடியட்ஸ், லைஃப் இன் எ மெட்ரோ மற்றும் தோல் (Dhol) போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக அறியப்பட்ட ஷர்மன் ஜோஷி, சமீபத்திய ஆண்டுகளில் பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். 47 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் ஷர்மனுக்கு பெரிய வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. சமீப காலமாக படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்வில்லை. இதுகுறித்து அறிந்த நடிகர் சல்மான் கான், தனது சிக்கந்தர் படத்தில் ஷர்மானுக்கு ஒரு கேரக்டரை வழங்கினார். இந்த வாய்ப்பு ஷர்மானின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
நகைச்சுவை மற்றும் நடிப்பில் தேர்ந்த ஷர்மன், பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் கடந்த 10 வருடங்களாக அவருக்கு எந்த ஒரு படமும் ஹிட் கொடுக்கவில்லை. ஏப்ரல் 28, 1974 இல் மும்பையில் பிறந்த ஷர்மன் ஜோஷி, 1999ஆம் ஆண்டு காட்மதர் படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும், இந்த படம் பாகஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை சந்தித்தது. இருந்தும் ஷர்மன் மனம் தளராமல் தொடர்ந்து நடித்து வந்தார்.
பல படங்களில் தோன்றிய பிறகு, ஷர்மன் 2006ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ரங் தே பசந்தி (Rang De Basanti) மூலம் அங்கீகாரம் பெற்றார். இந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இதை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்தார். 2009ஆம் ஆண்டில், ஷர்மன் 3 இடியட்ஸ் படத்தில் நடித்தார். இது உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
ஆனால், 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு, அவரது கேரியர் மீண்டும் சரிந்தது. ஷர்மன் 2010க்குப் பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். ஆனால் பெரிய வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான், சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் (Sikandar) திரைப்படத்தில் ஷர்மானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஷர்மன் ஜோஷி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
January 30, 2025 4:36 PM IST
[]
Source link