ஊட்டி, கொடைக்கானல் போல வால்பாறைக்கு செல்ல நவ.1 முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு | High Court orders implementation of e-pass scheme from Nov 1 to travel to Valparai like Ooty and Kodaikanal

Spread the love


சென்னை: ஊட்​டி, கொடைக்​கானல் போல வால்​பாறைக்கு செல்​ல​வும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நீல​கிரி மாவட்​டம் ஊட்டி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டம் கொடைக்​கானலில் சுற்​றுலாப் பயணி​களால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வகை​யில் இந்த இரு இடங்​களி​லும் எத்​தனை சுற்​றுலா வாக​னங்​களை அனு​ம​திக்​கலாம் என்​பது குறித்து உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சென்னை ஐஐடி மற்​றும் பெங்​களூரு ஐஐஎம் நிறு​வனங்​கள் ஆய்வு மேற்​கொண்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் இதுதொடர்​பான வழக்​கு​கள் நீதிப​தி​கள் என்.சதீஷ்கு​மார், டி.பரத சக்​ர​வர்த்தி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் வனத்​துறை தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் டி.சீனி​வாசன் ஆகியோர் ஆஜராகி, ஐஐடி மற்​றும் ஐஐஎம் சார்​பில் இடைக்​கால அறிக்​கைகளை தாக்​கல் செய்​தனர்.

அந்த அறிக்​கை​களில் கொடைக்​கானல், ஊட்​டிக்கு செல்​லும் சுற்​றுலா வாக​னங்​களின் எண்​ணிக்​கையை வெகு​வாக குறைக்க வேண்​டும், அரசு போக்​கு​வரத்தை பயன்​படுத்த சுற்​றுலா பயணி​களை ஊக்​குவிக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு பரிந்​துரைகள் சுட்​டிக்​காட்டப்​பட்டன.

மேலும் டிசம்​பரில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் என்​றும் தெரிவிக்கப்​பட்​டது. அதையடுத்து இந்த ஆய்வு குழு​வினருக்கு தேவை​யான தகவல்​கள் மற்​றும் ஆலோ​சனை​களை வழங்​கும் வித​மாக தமிழக தலை​மைச் செய​லா​ளர் தலை​மை​யில் விரை​வில் ஆய்​வுக்​கூட்​டம் நடத்த வேண்​டும் என அரசுக்கு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை அக்​டோபர் 31-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

அப்​போது ஊட்​டி, கொடைக்​கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்​டா​யம் என்​ப​தால் சுற்​றுலா ப்பயணி​கள் தற்போது வால்​பாறை​யில் அளவுக்கு அதி​க​மாக குவிந்து வரு​வ​தாக இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர்​கள் குழு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், ” ஊட்​டி, கொடைக்​கானலை விட வால்​பாறை, டாப்​சிலிப், ஆனைமலை புலிகள் காப்​பகம் போன்​றவை சுற்​றுச்​சூழல் ரீதி​யாக பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​கள்.

எனவே வால்​பாறைக்கு செல்​ல​ வரும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்​டத்தை அமல்​படுத்தி சுற்​றுலா பயணி​களின் கூட்​டத்தை கட்​டுப்​படுத்த வேண்​டும். அதே​போல வால்​பாறை, டாப்​-ஸ்​லிப் பகு​தி​களுக்​கும் தடை செய்​யப்​பட்ட பிளாஸ்​டிக் பொருட்​களை கொண்டு செல்​லாத வகை​யில் அதி​காரி​கள் கண்​காணிப்பை தீவிரப்​படுத்த வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணை​யை வரும்​ அக்​.31-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *