
2025ஆம் அண்டு கல்வியாண்டிற்கான
ஆண்டு விழாவினை
தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் அவர்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 36 சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025க்கான கல்வியாண்டிற்கான ஆண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். சென்னை மேயர் ப்ரியா. இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் துணை மேயர் மகேஷ்குமார், இணை ஆணையாளர் விஜயா ராணி மற்றும் நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், திருமதி.சர்ப ஜெயதாஸ் நரேந்திரன், மண்டல குழு தலைவர் யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இப்படிக்கு செய்தியாளர் யாதவராஜ்