இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது – டி.ராஜா | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

மே தினம் மற்றும் சிங்காரவேலர் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டி தோழர் நல்லக்கண்ணு செங்கொடி ஏற்றி சிறப்பித்தார். 

தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணுதேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு
தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு

இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 

மே தினம் மற்றும் சிங்காரவேலர் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு , மாநில செயலாளர் முத்தரசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மே தினத்தை முன்னிட்டி தோழர் நல்லக்கண்ணு செங்கொடி ஏற்றி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜா, மே தினம் என்று சொல்லும்போது தமிழ்நாட்டிற்கு தனி சிறப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் சென்னையில் தான் மே தினம் முதன்முதலில்  கொண்டாடபட்டது.

தற்போது இந்த நாட்டு மக்கள் எல்லாம் சுரண்டலுக்கு உள்ளாகி உள்ளனர். மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயத்திற்கு எதிரான அரசாக உள்ளது. மக்கள் உருவாக்கியுள்ள  நாட்டு சொத்துக்களையும், நாட்டு மக்களுக்காக  வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறார்கள்.

Also read… பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்துத்துவா என்ற கொள்கையின் அடிப்படையில் மத வெறியை தூண்டும் விதத்தில் தான் RSS பாஜக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை தலித் மக்களின் மீது தாக்குதலை நடத்தி  வருகிறார்கள். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மாநில நலன்கள் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியா ஒரு நாடு என்றால் எல்லா மொழியும் தேசிய மொழிதான். மேலும், மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது என டி.ராஜா தெரிவித்தார்.



Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *