
Last Updated:
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆட்சி செய்தபோது யூ பி எஸ்க்கு வேலை இல்லை தற்போது யூபிஎஸ் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியவில்லை ஐயப்பன்தாங்கல் பாரதிய ஜனதா கட்சியின் முப்பெரும் விழாவில் எச்.ராஜா பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்ற விழாவில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா,பாஜக மாநில துணை செயலாளர் வி. பி துரைசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பள்ளி படிப்பிற்கு பண உதவிகளையும் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவ ,மாணவிகள் பாரத பிரதமர் மோடி முகம் பதித்த மாஸ்க்குகளை அணிந்து அனைவரையும் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. மாணவர்கள் ஒழுக்கம் இல்லாமல் போனதற்கு திமுகவே காரணம், இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி செய்தபோது யுபிஎஸ்க்கு வேலை இல்லாமல் இருந்தது தற்போது யூபிஎஸ் இல்லாமல் ஒன்றும் செய்ய முடிவதில்லை என்றார். அரசியல் நாகரிகம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் என்றால் குறிப்பிட்ட சமுதாயத்தினரை பற்றி பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.
முன்னதாக மேடையில் பேசிய எச்.ராஜா இளையராஜா அம்பேத்கர்- மோடியை ஒப்பிட்டுப் பேசலாமா என்றால் இந்த ராஜாவும் பேசலாம் இளையராஜாவும் பேசலாம் எனவும் இசைஞானி இளையராஜா எனக்கு நல்ல நண்பர் அவர் கூறியது அம்பேத்கர் செய்ய நினைத்ததை மோடி நிறைவேற்றியுள்ளார் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அது குறித்து பேசுவது தவறு என்றார். மேலும் மோடி கொண்டுவந்த சுவச் பாரத் திட்டம் மூலம் 12,000 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்தத் திட்டம் பெண்கள் மானம் காக்க கொண்டு வந்த திட்டம் தான் இந்த தூய்மை இந்தியா திட்டம். அதனாலே இளையராஜா அம்பேத்கர் உடன் மோடியுடன் ஒப்பிட்டுப் பேசினார் எனவும் கூறினார்.
செய்தியாளர் : சோமசுந்தரம்