நெல்லை, தென்காசியில் மழை நீடிப்பு: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு; சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் | Rain continues in Nellai, Tenkasi: Water gushes at Courtallam Falls

Spread the love


தென்காசி: மேற்​குத் தொடர்ச்சி மலை​யில் மழை நீடிப்​ப​தால் தென்​காசி மாவட்​டம் குற்​றாலம் அருவி​களில் நேற்று தண்​ணீர் ஆர்ப்​பரித்​தது. இதனால் அருவி​களில் குளித்து மகிழ சுற்​றுலாப் பயணி​கள் குவிந்​தனர்.

திருநெல்​வேலி, தென்​காசி மாவட்​டங்​களில் மேற்​குத் தொடர்ச்சி மலை​யையொட்​டிய பகு​தி​களில் கடந்த சில நாட்​களாக மழை பெய்து வரு​கிறது. நெல்லை மாவட்​டத்​தில் நேற்று காலை வரையி​லான 24 மணி நேரத்​தில் நாலு​முக்கு பகு​தி​யில் 38 மி.மீ. ஊத்து பகு​தி​யில் 34 மி.மீ. காக்​காச்சி பகு​தி​யில் 32 மி.மீ. மாஞ்​சோலை​யில் 27 மி.மீ. மணி​முத்​தாறில் 5 மி.மீ. மழை பதி​வானது. பாப​நாசம் அணைக்கு விநாடிக்கு 2,003 கனஅடி நீர் வந்​தது. 1,750 கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்​டது. அணை நீர்​மட்​டம் 118.55 அடி​யாக இருந்​தது. சேர்​வலாறு அணை நீர்​மட்​டம் 118.11 அடி​யாக இருந்​தது.

இதே​போல, தென்​காசி மாவட்​டத்​தில் குண்​டாறு அணை​யில் 4 மி.மீ. மழை பதி​வானது. செங்​கோட்​டை​யில் 18 மி.மீ. அடவிந​யி​னார் அணை​யில் 16 மி.மீ. தென்​காசி​யில் 6 மி.மீ. மழை பதி​வானது. கடனாநதி அணை நீர்​மட்​டம் 67.10 அடி​யாக​வும், ராமநதி அணை நீர்​மட்​டம் 70 அடி​யாக​வும், கருப்​பாநதி அணை நீர்​மட்​டம் 60.37 அடி​யாக​வும் இருந்​தது. குண்​டாறு அணை, அடவிந​யி​னார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்​ளள​வில் உள்​ளன. இந்த அணை​களுக்கு வரும் நீர் அப்​படியே உபரி​யாக வெளி​யேற்​றப்​படு​கிறது.

குற்​றாலத்​தில் அனைத்து அருவி​களி​லும் தண்​ணீர் ஆர்ப்​பரித்து கொட்​டியது. பிர​தான அருவி மற்​றும் பழைய குற்​றாலம் அரு​வி​யில் குளிக்க தடை விதிக்​கப்​பட்​டது. ஐந்​தரு​வி, புலியரு​வி,சிற்​றரு​வி​யில் சுற்​றுலாப் பயணி​கள் குளிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர். விடு​முறை தின​மான நேற்று குற்​றாலத்​தில் குவிந்த சுற்​றுலாப் பயணி​கள் அருவி​களில் குளித்து மகிழ்ந்​தனர்.





Source link


Spread the love
  • Related Posts

    அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர் | Trump must stop Gaza war if he wants Nobel Peace Prize French President Macron

    Spread the love

    Spread the love      பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *