உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump warns Putin of dire consequences if Ukraine war doesnt end

Spread the love


வாஷிங்டன்: உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இப்​போதைய நிலை​யில் உக்​ரைனின் 22 சதவீத பகு​தி​களை ரஷ்யா கைப்​பற்றி உள்​ளது. கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடு​கள் இடையி​லான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வரு​கிறார்.

இதுதொடர்​பாக கடந்த பிப்​ர​வரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்​கள் இன்று முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்​டனில் நேற்று முன்​தினம் நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: ஆகஸ்ட் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேச உள்​ளேன். இந்த பேச்​சு​வார்த்தைக்கு பிறகும் உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும். என்னவித​மான விளைவு​கள் என்​பதை இப்​போதைக்கு பகிரங்​க​மாக கூற முடி​யாது.

ரஷ்ய அதிபர் புதின் உடனான பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக அமைய விரும்​பு​கிறேன். இதன்​பிறகு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கியை சந்​தித்​துப் பேசுவேன். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும். இதில் அமெரிக்​கா, ரஷ்​யா, உக்​ரைன் அதிபர்​கள் பங்​கேற்​பார்​கள். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​தார்.

ரஷ்ய அதிபர் மாளி​கை​யின் மூத்த அதி​காரி யூரி உஸ்​கோவ், மாஸ்​கோ​வில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: அமெரிக்​கா​வின் அலாஸ்கா பகு​தி​யில் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிபர் ட்ரம்ப், அதிபர் புதின் சந்​திப்பு நடை​பெற உள்​ளது. ரஷ்ய தரப்​பில் அதிபர் புதின் உடன் வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாரவ், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரே பெலோ​சோவ், நிதியமைச்​சர் அண்​டன் சிலுன்​னோவ் மற்​றும்2 மூத்த அதி​காரி​கள் பங்​கேற்​பார்​கள்.

இதே​போல அமெரிக்கா தரப்​பில் அதிபர் ட்ரம்ப் மற்​றும் அந்த நாட்​டின் வெளி​யுறவு, பாது​காப்​பு, நிதித் துறை அமைச்​சர்​கள், 2 மூத்த அதி​காரி​கள் பங்​கேற்​பார்​கள். பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக அமைந்​தால் அதிபர்​ ட்​ரம்​பும்​ அதிபர்​ புதினும்​ கூட்​​டாக நிருபர்​களுக்​கு பேட்​டி அளிப்​​பார்​கள்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.





Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *