Last Updated:
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மற்றும் 15 பேர் கைது. 200 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விசாரணை நடக்கிறது.
சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதில் 200 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து மண்டல குழு தலைவர்கள் மற்றும் இரண்டு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேலும் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் உள்பட 15 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முறைகேடு புகார் தொடர்பாக மதுரை மாநகராட்சியில் மாமன்ற செயலாளராக பணியாற்றிவிட்டு தற்போது பணிமாறுதலில், தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக உள்ள சுரேஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக டிஐஜி அபினவ் குமார் தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை சென்னையில் வைத்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Madurai,Tamil Nadu
August 12, 2025 9:47 PM IST







