ஏற்காடு கோடை விழா: செல்லப்பிராணிகள் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள் | Yercaud Summer Festival

Spread the love


சேலம்: ஏற்​காட்​டில் கோடை விழாவையொட்டி நடை​பெற்ற செல்​லப் பிராணி​கள் கண்​காட்​சி​யில், வளர்ப்பு நாய்​கள் பல்​வேறு சாகசங்​களை செய்து சுற்​றுலாப் பயணி​களை உற்​சாகப்​படுத்​தின. சேலம் மாவட்​டம் ஏற்​காட்​டில் 48-வது கோடை விழா மற்​றும் மலர்க் கண்​காட்சி நடை​பெற்று வரு​கிறது. ஒவ்​வொரு நாளும் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், ஏற்​காடு ஏரியை ஒட்​டி​யுள்ள திறந்​தவெளி அரங்​கில் நேற்று செல்​லப் பிராணி​கள் கண்​காட்சி நடை​பெற்​றது. கால்​நடை பராமரிப்​புத் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட இக்​கண்​காட்​சி​யில், கோம்​பை, சிப்​பிப்​பாறை, ராஜ​பாளை​யம், அல்​சேஷன், ஜெர்​மன் ஷெப்​பர்ட், டாபர்​மேன் வகை நாய்​கள் பங்​கேற்​றன.

மேலும், காவல் துறை​யின் மோப்ப நாய்​களும் பங்​கேற்​று, பராமரிப்​பாளரின் கட்​டளை​களைக் கேட்​டு, அவற்​றுக்​கேற்ப செயல்​பட்​டன. மறைத்து வைக்​கப்​பட்ட பொருளை கண்​டு​பிடித்​துக் கொடுப்​பது உள்​ளிட்ட சாகசங்​களை நிகழ்த்​தின.

செல்​லப் பிராணி​கள் கண்​காட்​சி​யில் வளை​யங்​கள் வழி​யாக

பாய்ந்து சென்று சாகசம் செய்த நாய்

இதில், சேலம் எஸ்​.பி. கவுதம் கோயல் பராமரித்து வரும் ஜெர்​மன் ஷெப்​பர்ட் முதல் பரிசும், மாநகர காவல் துறை​யின் டாபர்​மேன் 2-வது பரிசும், சேலம் சீல​நாயக்​கன்​பட்​டியைச் சேர்ந்த சுரேஷ் என்​பவரின் லேப்​ர​டார் 3-வது பரிசும் வென்​றன.

மேலும், செல்​லப் பிராணி​கள் கண்​காட்​சி​யில் வளர்ப்​புப் பூனை​கள், நாட்​டின மாடு, எலிகளும் பங்​கேற்​றன. குறிப்​பாக, புங்​க​னூர் குட்டை காளை மாடு, வலம்​புரி ஆடு, சண்​டைக் கிடா போன்​றவை பார்​வை​யாளர்​களைக் கவர்ந்​தன. ஞாயிறு விடு​முறை என்​ப​தால் ஏற்​காட்​டில் நேற்று சுற்​றுலாப் பயணி​கள் அதிக அளவில் திரண்​டனர்.

இதனால் மலைப் பாதை உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. அதே​நேரத்​தில், நேற்று நண்​பகல் வேளை​யிலும் கடும் பனி மூட்​டம் நில​வியது, சுற்​றுலாப் பயணி​களை உற்​சாகப்​படுத்​தி​யது.





Source link


Spread the love
  • Related Posts

    கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி | Tsunami hits coasts of Russia Japan after earthquake hits

    Spread the love

    Spread the love      டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *