அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிகள், தற்போது தமிழ்நாட்டில் 38 பள்ளிகள் என விரிவடைந்துள்ளன. இப்பள்ளிகள் நவீன உள்கட்டமைப்பு, தங்கும் வசதி, மேம்பட்ட ஆய்வகங்கள் மற்றும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகின்றன.






