
Last Updated:
குடும்பச் செலவுக்குக்கூட தனது கணவர் பணம் தராமல் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.
சீரியல் சூட்டிங்கே கதி என கணவர் வீட்டுக்கே வராத நிலையில், அவரைத் தேடி ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று அவரது மனைவி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகர் ஐயப்பன். கயல், தென்றல், கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஊட்டியைச் சேர்ந்த பிந்தியா என்ற பெண்ணை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அவ்வப்போது சண்டை ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஐயப்பன் வீட்டிற்கே வரவில்லை எனக் கூறி மனைவி பிந்தியா, வளசரவாக்கத்தில் சூட்டிங் நடைபெறும் வீட்டுக்கே சென்று, ஏன் வரவில்லை என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். நன்றாக சம்பாதிப்பதாகவும், ஆனால் தன்னையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்துவதாகவும், குடும்பச் செலவுக்குக்கூட தனது கணவர் பணம் தருவதில்லை பிந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: Manoj Kumar Death: பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்.. பாலிவுட் திரையுலகில் சோகம்!
இதனை மறுத்துள்ள நடிகர் ஐயப்பன், தன்னை வேண்டுமென்றே மனைவி அசிங்கப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், தான் குடும்பம் நடத்த பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
April 04, 2025 11:23 AM IST
3 மாதமாக வீட்டிற்கே வருவதில்லை.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கணவனை வெளுத்து வாங்கிய மனைவி!
[]
Source link