1939-ம் ஆண்டு வெளியான முதல் பதிப்பு.. சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் 81 கோடிக்கு ஏலம்! | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

சிறுவர்களை மலைக்க வைக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர்மேன் காமிக்ஸ் வகை புத்தக வரிசையில் முதன் முதலாக வெளியான இந்த புத்தகம் 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

News18
News18

சிறுவர்களை மலைக்க வைக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர்மேன் காமிக்ஸ் வகை புத்தக வரிசையில் முதன் முதலாக வெளியான இந்த புத்தகம் 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சகோதரர்கள் மூன்று பேர் தங்களது மறைந்த தாயாரின் அறையை கடந்த ஆண்டு சுத்தம் செய்தபோது சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை கண்டெடுத்தனர். இது, சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் சாகசங்கள் குறித்த 1939 ஆம் ஆண்டு வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெக்சாஸ் நகரில் ஹெரிடேஜ் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் இந்த புத்தகம் இந்திய மதிப்பில் 81 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில், அந்த மூன்று சகோதரர்களும் வாங்கிய காமிக்ஸ் புத்தகத்தை அவர்களது தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாகவும், இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளதாகவும் ஹெரிடேஜ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 86 ஆண்டுகள் பழமையான இந்த புத்தகம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    “வாழ்நாள் முழுவதும் உன் அருகில் நான்…” – 10வது திருமண நாள்… அசினின் கணவர் நெகிழ்ச்சி! | பொழுதுபோக்கு செய்திகள்

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 8:40 PM IST மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். News18…


    Spread the love

    Bigg Boss 9 Title Winner | பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியான கணிப்பு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      தொடர்ந்து 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதே போல், சாண்ட்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 4 பேரும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *