1939-ம் ஆண்டு வெளியான முதல் பதிப்பு.. சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் 81 கோடிக்கு ஏலம்! | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

சிறுவர்களை மலைக்க வைக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர்மேன் காமிக்ஸ் வகை புத்தக வரிசையில் முதன் முதலாக வெளியான இந்த புத்தகம் 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

News18
News18

சிறுவர்களை மலைக்க வைக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர்மேன் காமிக்ஸ் வகை புத்தக வரிசையில் முதன் முதலாக வெளியான இந்த புத்தகம் 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சகோதரர்கள் மூன்று பேர் தங்களது மறைந்த தாயாரின் அறையை கடந்த ஆண்டு சுத்தம் செய்தபோது சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை கண்டெடுத்தனர். இது, சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் சாகசங்கள் குறித்த 1939 ஆம் ஆண்டு வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெக்சாஸ் நகரில் ஹெரிடேஜ் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் இந்த புத்தகம் இந்திய மதிப்பில் 81 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில், அந்த மூன்று சகோதரர்களும் வாங்கிய காமிக்ஸ் புத்தகத்தை அவர்களது தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாகவும், இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளதாகவும் ஹெரிடேஜ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 86 ஆண்டுகள் பழமையான இந்த புத்தகம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ஜேசன் சஞ்சய் படத்தில் இணைந்த நடிகை.. கேமியோவில் வரும் மற்றொரு பிரபலம்!

    Spread the love

    Spread the love      ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாகவும், கேமியோவில் பிரபலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. [] Source link Spread the love     


    Spread the love

    Sara Arjun: சின்னஞ்சிறு நிலவே… ‘நாயகி’யான சாரா அர்ஜூன் க்ளிக்ஸ்!

    Spread the love

    Spread the love      நடிகை சாரா அர்ஜூனின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *