
Last Updated:
கார் ரேஸிங்கை மையமாகக் கொண்ட ஹாலிவுட் படங்களில் நடிக்க, தான் தயார் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அழைப்பு வந்தால் Fast & Furious போன்ற படங்களில் நடிக்க தயார் என நடிகர் அஜித்குமார் கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சினிமா மற்றும் கார் ரேஸிங் என இரட்டைச் சவாரி செய்துவரும் அஜித், தனது பெயரில் சொந்தமாக ரேஸ் நிறுவனம் ஒன்றையும் அண்மையில் தொடங்கி போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ஐரோப்பா 24H கார் ரேஸில் அஜித் பங்கேற்றிருந்தபோது, போட்டியின் இடையே பேட்டியளித்தார். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘F1’ என்ற கார் பந்தயத்தை மையப்படுத்திய திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய தொகுப்பாளர், நீங்களும் கார் ரேஸை மையப்படுத்திய நடிப்பீர்களா? என அஜித்திடம் கேட்டார்.
அதற்கு ஹாலிவுட் படங்களில் தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்திய அஜித், தனது படங்களின் கார் ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடித்து வருவதால் ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்களில் நடிப்பது சாத்தியம்தான் என்ற தொனியிலும் பதிலளித்துள்ளார்.
அஜித்தின் இந்த பதிலால் உற்சாகமாகியுள்ள ரசிகர்கள், ஹாலிவுட்டிலும் அஜித்தின் கார் ஸ்டண்ட் காட்சிகளை காண ஆவலில் உள்ளனர்.
July 06, 2025 6:50 AM IST
[]
Source link