
Last Updated:
இசைக் குடும்பங்களைச் சேர்ந்த வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சபேஷ்-முரளி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இணைந்து பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இசைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பாடல் பாடி மகிழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கங்கை அமரனின் மகன்களான இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்களான இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளியை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் பங்கேற்றுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து பாடல் பாடி அசத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் அது கச்சேரி தான்” எனக் கூறி இந்த வீடியோவை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார்.
March 10, 2025 7:01 AM IST
[]
Source link