
Last Updated:
சென்னை அயனாவரத்தில் வாட்ஸ்ஆப் டிபியில் இருந்த மனைவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், நந்தகுமார் மனைவியின் முகத்தை மாற்றி மார்பிங் செய்து பல்வேறு ஆபாச புகைப்படங்களையும் உருவாக்கியுள்ளார். சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கே வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார் மர்மநபர் இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் மர்மநபருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஜிபேயில் பணம் அனுப்பும் படி கேட்டுள்ளார்.
பணம் தராமல் நம்பரை பிளாக் செய்தால் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் நந்தகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அயனாவரம் காவல்நிலையத்தில் தம்பதி இருவரும் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்மநபர் தேடி வருகின்றனர்.
April 29, 2022 7:37 PM IST