
Last Updated:
நடிகர் ரவி மோகன், பாலு மகேந்திராவின் ‘வீடு’ போலவே இந்தப் படம் பேசுபொருளாக அமையும் எனக் கூறினார். சித்தார்த்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
“நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது” என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. இந்தப் படம் வரும் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவி மோகன் கலந்துகொண்டார்.
மேடையில் பேசிய அவர், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். மிகப்பெரிய உணர்வாக இந்த படம் எனக்கு அமைந்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். பாலு மகேந்திரா அவர்களின் ‘வீடு’ எந்தளவுக்கு பேசுபொருளாக அமைந்ததோ அதுபோல இந்தப் படமும் உங்களுக்கு அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம்.
சித்தார்த் எப்போதும் தப்பான படங்கள் செய்ததில்லை. இனியும் அப்படித்தான் இருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள். மீதா, சைத்ரா இருவருக்கும் வாழ்த்துக்கள். நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன்.
ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. சரத் சார், தேவயாணி மேம் சிறந்த நடிகர்கள். நல்ல கதைகளையும் படங்களையும் பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கான படமாக இது இருக்கும்”.
June 28, 2025 7:23 PM IST
[]
Source link