வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை (Bank Account Nominations) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் (Banking Laws (Amendment) Act, 2025) 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட பங்குதொகை வழங்குவதற்கேற்ப அதற்கான விகிதாசாரத்தை நிர்ணயம் செய்யமுடியும். நிரந்தர வைப்புதொகை கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வாரிசுதாரர்களை நியமிக்க முடியும்.






