
சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சுமார் 20க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனை பிரிதிநிதிகள்(மெடிக்கல் ரெப்) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் என்பவர் தங்களுடன் மெடிக்கல் ரெப்-பாக கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான குடும்ப சோகக்கதையை கூறி இலட்சக்கணக்கில் பணத்தை கடனாக கேட்டதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெற்றோருக்கு மருத்துவச் செலவு அவசரமாக தேவைப்படுகிறது, நிலத்தை விற்பனை செய்த பணம் வங்கியில் வருமான வரி பிரச்சனை காரணமாக மாட்டிக் கொண்டுள்ளதாக கூறியும், என பல்வேறு முறையில் நாடகமாடி ஒவ்வொருவரிடமும் செல்போனை வாங்கி நவி (Navi ) என்ற ஆன்லைன் லோன் செயலியில் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் முதல் அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
கடனாக பணத்தை வாங்குவதற்கு காலில் கூட விழுந்து நம்பும்படி நடித்து பணத்தை வாங்கிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் தன்னோடு பழகிய மருந்து விற்பனை பிரதிநிதிகளை மட்டும் குறி வைத்து இதுபோன்று கடன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
10 % இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் – தொல்.திருமாவளவன்!
ராஜேஷும் மிகப் பிரபலமான தனியார் மருந்து நிறுவனத்தில் சுமார் 70,000 க்கு மேல் சம்பளமும், வசதியாக இருக்கும் நபர் என்பதால், மருத்துவத் தேவைக்காகவும் அவசர தேவைக்காகவும் பணம் கேட்கும் பொழுது உதவும் எண்ணத்தில் நம்பி கடனாக பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாங்கிய கடனை குறுகிய காலத்திற்குள் திருப்பித் தருவதாகவும் வாக்குறுதி அளித்ததால் அதனை நம்பி தாங்கள் ஆன்லைன் கடன் செயலியை டவுன்லோட் செய்து பணத்தை தங்கள் ஆவணங்கள் மூலம் கடனாக வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் ரூ 1.5 கோடி வரை கடன் வாங்கி தலைமறைவாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். ராஜேஷ் தங்கள் ஆவணங்களை பயன்படுத்தி கடன் செயலியில் வாங்கிய கடனுக்கு முதல் தவணை செலுத்தும் தேதி வந்த போது, ராஜேஷ் அந்த பணத்தை கட்டாமல் ஏமாற்றியதன் மூலம் தாங்கள் மோசடிக்கு உள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
அதிமுக்கிய வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் நிலையம் – தமிழக அரசு
இது தொடர்பாக ராஜேஷின் வீட்டில் அவரது தாய் மற்றும் சகோதரரியிடம் கேட்கும் பொழுது அலட்சியமாக பதில் கூறி தங்களை ஏமாற்றுவதாகவும் புகார் அளித்துள்ளனர். மேலும், குடும்பத்தினரிடம் விசாரணை செய்ததில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை கட்டி சூதாடி ராஜேஷ் பணத்தை இழந்துள்ளதாகவும், தாங்கள் ராஜேஷை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என முறையாக பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜேஷ் உடனடியாக பணத்தை கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆன்லைன் கடன் செயலியில் வாங்கிய பணத்திற்கு அதிக வட்டிக்கு பணத்தை செலுத்த வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 33 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் எனவும், மாதாமாதம் தவணைகள் செலுத்தினாலும் தேவையில்லாமல் அபராதங்களை விதித்து கடன் செயலி நிறுவனம் தங்களிடமிருந்து பணத்தை பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிலர் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையில், அந்த தனியார் கடன் செயலி நிறுவனம் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்ப நேரிடும் என எச்சரிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நூதன முறையில் தங்களை ஆன்லைன் கடன் செயலியின் கடனாளியாக மாற்றிவிட்டு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான ராஜேஷை உடனடியாக கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
November 07, 2022 7:26 PM IST