
Last Updated:
இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட தனசேகரிடம் எழும்பூர் ரயில்வே போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பெண்கள் கோச்சில் ஏற முற்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த ஆசீர்வா இது பெண்கள் கோச் எனவும் இதில் ஏறக்கூடாது எனவும் அவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆர்.பி.எஃப் காவலரான ஆசிர்வாவின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
உடனடியாக ரயில்வே போலீசார் RPF காவலரான ஆசிர்வாவை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். RPF பெண் காவலரை கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் தொடர்பாகக் கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல், முறையற்ற தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெண் காவலரின் கழுத்தில் கத்தியால் குத்திய நபரை அடையாளம் கண்டு, பூக்கடை பகுதியில் வசித்து வரும் ஒருவரைக் கைது செய்து எழும்பூர் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் தனசேகர் என்பதும் விழுப்புரம் அடுத்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியுடன் சென்னை பூக்கடை பகுதியில் உள்ள பிளாட்பார்ம்களில் தங்கி பூ மற்றும் பழ வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. ரயிலில் பூ மற்றும் பழ வியாபாரம் செய்யும் போது ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது பூ மற்றும் பழ வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுத்து வந்ததாகவும் இதனால் காவலர்கள் மீது தனசேகர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி இரவு மது போதையில் தனசேகர் பெண்கள் கோச்சில் ஏறியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஆசிர்வா என்ற ஆர்.பி.எஃப் காவலர் இங்கு ஏறக்கூடாது எனக் கூற மது போதையில் இருந்த தனசேகர் தான் வைத்திருந்த கத்தியால் பெண் காவலரை கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட தனசேகரிடம் எழும்பூர் ரயில்வே போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனசேகர் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த ஆர்பிஎப் பெண் காவலர் ஆசீர்வா பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலைமையில் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
Chennai,Tamil Nadu
August 26, 2022 7:52 PM IST