
Last Updated:
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தில் ஆமிர்கான் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தாஹா’ என்ற பெயரில் ஆமிர்கான் மாஸான லுக்கில் கையில் சிகார் வைத்துக்கொண்டு போஸ் தருகிறார்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கதாபாத்திர போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘கூலி’. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிட்டு’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார். டி.ஆரின் குரலும் இடம்பெற்றிருந்தது. ’கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகின. இதில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம் ஒன்றை படக்குழு வெளியிடாமல் வைத்திருந்தது. அதாவது பாலிவுட் நடிகர் ஆமிர்கான் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் கசித்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

மேலும் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் பேட்டிகளில் ஆமிர்கான் தான் ‘கூலி’ படத்தில் நடிக்கிறேன் என்பதை உறுதி செய்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வேறொரு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் ‘கூலி’ படத்தில் ஆமீர்கானின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘தாஹா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ஆமிர்கான் நடிக்கிறார். பனியன் அணிந்துகொண்டு ப்ளாக் அண்ட் வொயிட் போஸ்டரில் கையில் சிகார் வைத்துக்கொண்டு மாஸான லுக்கில் போஸ் தருகிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
July 03, 2025 7:12 PM IST
[]
Source link