
Last Updated:
கூட்ட நெரிசல் கொண்ட திரையரங்கு ஒன்றில் பட்டாசு வெடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ் ஹீரோக்களின் படம் வெளியானால், முதல் நாளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதும், பட்டாசு வெடிப்பது, கட் அவுட்-க்கு பால் அபிஷேகம் செய்வதும் நம் நாட்டில் நடக்கும் பொதுவான நடைமுறையாகும். அதிகபடியான கொண்டாட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படி கூட்ட நெரிசல் கொண்ட திரையரங்கு ஒன்றில் பட்டாசு வெடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது ‘எ மைன்கிராஃப்ட் மூவி’ திரைப்படத்தின் திரையிடலில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோவில், திரையரங்கிற்குள் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதும், பட்டாசுகளை வெடித்து தியேட்டரை ஒளிரச் செய்வதும், பட்டாசு வெடிப்பதால் மக்கள் பீதியடைவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த தகவல் உண்மையல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்திகளின்படி, மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் மாலேகானில் உள்ள மோகன் சினிமா தியேட்டரில் சல்மான் கானின் ‘டைகர் 3’ திரைப்படத்தின் திரையிடலின்போது இந்த சம்பவம் நடந்தது.
திரையின் வலது பக்கத்திலிருந்து பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. ‘எ மைன்கிராஃப்ட் மூவி’ திரைப்படத்தின் திரையிடலின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. எ மைன்கிராஃப்ட் மூவி என்பது 2025ஆம் ஆண்டு ஜாரெட் ஹெஸ் இயக்கிய அமெரிக்க திரைப்படமாகும், இது 2011ஆம் ஆண்டு மொஜாங் ஸ்டுடியோஸின் வீடியோ கேம் மைன்கிராஃப்டை அடிப்படையாகக் கொண்டது. “மைக்ராஃப்ட் திரைப்படத்தின்போது தியேட்டரில் பட்டாசு” என்ற கேப்ஷனுடன் Xல் வெளியிடப்பட்ட வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.
FIREWORKS SET OFF IN ‘MINECRAFT’ MOVIE THEATER. 😲🎆
Should they be charged with Arson? pic.twitter.com/txHuFAKamZ— DramaAlert (@DramaAlert) April 13, 2025
இந்நிலையில் வைரலாகும் இந்த வீடியோவானது ‘எ மைன்கிராஃப்ட் மூவி’ திரைப்படத்தின் திரையிடலில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில், இந்த வீடியோவானது 2023ஆம் ஆண்டு இந்தியாவில் பாலிவுட் படமான டைகர் 3 திரையிடலின்போது நடந்தது என்று யூசர் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு யூசர், “இது மைன்கிராஃப்ட் திரைப்படம் அல்ல. இது டைகர் 3 திரையிடலின்போது நடந்தது என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் ‘டைகர் 3’ திரையிடலின்போது சல்மான் கான் ரசிகர்கள் பட்டாசு வெடிக்கும் காட்சிகள் வைரலானதை அடுத்து, மாலேகான் போலீசார் 112 மற்றும் 117 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தியேட்டருக்கு வந்தவர்கள் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டதாகவும், இது எப்படி நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை எனவும் தியேட்டர் உரிமையாளர் கூறியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: காரின் பின்பகுதியில் தொங்கிய மனித கை…! மும்பையில் பீதியைக் கிளப்பிய அதிர்ச்சி சம்பவம்…
எனவே, ஹாலிவுட் படமான ‘எ மைன்கிராஃப்ட் மூவி’ திரையிடலின்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படும் புரளி பொய்யானது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் ‘எ மைன்கிராஃப்ட் மூவி’ ஆகும். இது உலகளவில் $550 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
April 24, 2025 12:56 PM IST
[]
Source link