மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் அக்டோபர் வரை இயக்கம் | Special hill train between Mettupalayam – Ooty to run till October

Spread the love


ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​துக்கு வரும் சுற்​றுலா பயணி​களுக்​காக, மேட்​டுப்​பாளை​யம் – ஊட்​டி, ஊட்டி – குன்னூர், ஊட்டி – கேத்தி இடையேசிறப்பு மலை ரயில் அக்​டோபர் இறு​திவரை இயக்​கப்பட உள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். மேட்​டுப்​பாளை​யம் – குன்​னூர் – ஊட்டி இடையே தலா ஒரு முறை, ஊட்டி – குன்​னூர் இடையே தலா 4 முறை மலை ரயில் இயக்​கப்​படு​கிறது.

கோடை சீசனின்​போது சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​த​தால், மேட்​டுப்​பாளை​யம் – ஊட்​டி, ஊட்டி – குன்​னூர் மற்​றும் ஊட்டி – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்​கப்​பட்​டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்​த​தால், ஆகஸ்ட் மாதம் வரை மலை ரயில் சேவை நீட்​டிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், அக்​டோபர் இறு​தி வரை சிறப்பு மலை ரயில் இயக்​கப்​படும் என்று அறிவிக்கப்பட்டுள்​ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பயணி​கள் வசதிக்​காக மேட்​டுப்​பாளை​யம் – ஊட்டி இடையே இம்​மாதம் 23, 30-ம் தேதி, செப்​டம்​பர் 5, 7,அக்​டோபர் 2, 4, 17, 19-ம் தேதி​களில் சிறப்பு ரயில் இயக்​கப்படும். இந்த ரயில் மேட்​டுப்​பாளை​யத்​தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்​பட்​டு, மதி​யம் 2.25 மணிக்கு ஊட்டி வந்​தடை​யும். பின்​னர் மறு​நாள் காலை 11.25 மணிக்கு ஊட்​டி​யில் இருந்து புறப்​பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்​டுப்​பாளை​யம் சென்​றடை​யும்.

இந்த சிறப்பு ரயி​லில் 40 முதல் வகுப்​பு, 140 இரண்​டாம் வகுப்பு இருக்​கைகள் இருக்​கும். ஊட்​டி​யில் இருந்து குன்​னூருக்கு இம்​மாதம் 23, 30-ம் தேதி, செப்​டம்​பர் 5, 7, அக்​டோபர் 2, 4, 17, 19-ம் தேதி​களில் சிறப்பு ரயில் இயக்​கப்படும். குன்​னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்​படும் ரயில், ஊட்டிக்கு காலை 10.45 மணிக்கு வந்​தடை​யும். ஊட்​டி​யில் இருந்து மதி​யம் 2.50 மணிக்​குப் புறப்​பட்டு மாலை 3.56 மணிக்கு குன்​னூர் சென்​றடையும்.

இதில், 80 முதல் வகுப்பு மற்​றும் 140 இரண்​டாம் வகுப்பு இருக்​கைகள் இருக்​கும். இதே​போல, ஊட்டி – கேத்தி இடையே இம்​மாதம் செப்​டம்​பர் 5, 6, 7, அக்​டோபர் 2, 3, 4, 5, 18, 19-ம் தேதி​ களில் சிறப்பு ரயில் இயக்​கப்​படும். ஊட்​டி​யில் இருந்து காலை 9.45, 11.30 மற்​றும் மதி​யம் 3 மணிக்கு இந்த ரயில் இயக்​கப்​படும். இந்த சிறப்பு ரயிலில் 80 முதல் வகுப்பு மற்​றும் 130 இரண்​டாம் வகுப்பு இருக்​கைகள் இருக்​கும். இந்த ரயி​லில் பயணிக்க முன்​ப​திவு செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.





Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *