
Last Updated:
இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியை சிறப்பு விருந்தினராக காண வந்த நடிகர் விஷால் மேடையில் பேசி முடித்தபின் திடீரென மயங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெறும்.
இதனை முன்னிட்டு சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். போட்டியின் போது நடிகர் விஷால் பேசி திருநங்கைகளை ஊக்கப்படுத்தினார். தனது பேச்சை அவர் முடித்த போது திடீரென மேடையிலேயே மயங்கி சரிந்தார்.
விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நிகழ்ச்சியில் மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்#Vishal #Villupuram #Koovagam #News18TamilNadu pic.twitter.com/6BWe2VCVBP
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 11, 2025
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகள் மயங்கி கிடந்த விஷால் பின்னர் சுதாரித்து மெதுவாக எழுந்திருக்க தொடங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விஷாலை கைகளால் பற்றி பிடித்தவாறு விழா நடக்கும் இடத்தில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் விஷால் இயல்பு நிலைமைக்கு திரும்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
May 11, 2025 10:33 PM IST
[]
Source link