
Last Updated:
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்நிலையில் இம்மாநாட்டில் மத மற்றும் அரசியல் கருத்துகள் தொடர்பான நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மத நல்லிணக்கத்திற்கான மதுரை மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான எஸ்.வாஞ்சிநாதன், காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வகுப்புவாத விரோதத்தைத் தூண்டுவதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
July 02, 2025 9:03 PM IST
[]
Source link