Last Updated:
TN Paralympic Sports Players | தமிழ்நாடு பாராலிம்பிக் அமைப்பு மாநில அளவிலான போட்டிகளை நடத்தி தேசிய போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு பாராலிம்பிக் அமைப்பு மாநில அளவிலான போட்டிகளை நடத்தி தேசிய போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் 37 வீரர்கள் தேசிய போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் தமிழ்நாட்டு அணி 13 தங்கம், 18 வெள்ளி, ஆறு வெண்கலம் என 37 பதக்கங்கள் வென்று 5 வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 44 பதக்கங்கள் வென்று 3 வது இடத்தை பிடித்திருந்தது.
போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பயண செலவு, பதிவு கட்டணம் ஆகியவை வழங்கப்படவில்லை என போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையை சேர்ந்த ஞானபாரதி தேசிய போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட அவர் தன் சொந்த செலவிலேயே போட்டிகளில் கலந்து கொண்டதாக கூறுகிறார்.
தமிழ்நாடு பாராலிம்பிக் அமைப்பின் செயலாளர் கிருபாகர் ராஜாவிடம் இது குறித்து கேட்ட போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் கடந்த மாதம் தான் தங்கள் அமைப்பு இணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது வரை தன்னார்வலர்கள் வழங்கிய நன்கொடை வைத்து தான் வீரர்களுக்கு செலவு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கிறார். தேசிய போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் டிக்கெட் மற்றும் பதிவு கட்டணத்தை திருப்பி தர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
April 22, 2022 3:14 PM IST







