மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள்நிதி.. நேரில் வந்த முதல்வர் – அவருக்கு என்னாச்சு? | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

அருள்நிதி படப்பிடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு, அறுவை சிகிச்சை நடைபெற்றது.

News18
News18

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அருள்நிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் இவர். கருணாநிதியின் மூத்த மகன் தமிழரசுவின் மகன்தான் அருள்நிதி. வம்சம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இதன்பின் உதயன், மௌனகுரு, டிமாண்டி காலனி, கே-13, இரவுக்கு ஆயிரம் கண்கள், திருவின் குரல் என கவனிக்கத்தக்க படங்களில் நடித்து நடிகராக தன்னை நிலைநிறுத்தினார். கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது அதன் அடுத்த பாகத்தில் நடித்து வருகிறார். சில நாட்கள் முன்பு அவர் நடித்த ராம்போ படம் வெளியானது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி அருள்நிதி காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துவரும் அவரை தற்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அருள்நிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரின் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    பாகுபலி 'சிவகாமி' கேரக்டரில் ஸ்ரீதேவி? – போனி கபூர் பேசியது என்ன?

    Spread the love

    Spread the love      பாகுபலியின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி எபிக்’ வெளியாகும் நேரத்தில் போனி கபூர் வெளியிட்டுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. [] Source link Spread the love     


    Spread the love

    முழு வீச்சில் ‘பராசக்தி’ பட பணிகள்… தொடங்கியது ரவி மோகன் டப்பிங்.. திட்டமிட்டபடி வெளியீடு | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      Last Updated:November 10, 2025 10:21 PM IST சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் – சுதா கொங்கரா சிவகார்த்திகேயன், ரவி மோகன்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *