Last Updated:
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தார்மீக பொறுப்பேற்று மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்ய உள்ளார்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் தனது கணவர் கைதைத் தொடர்ந்து, மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலித்ததில் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக முன்னாள் ஆணையர் தினேஷ் புகார் அளித்திருந்தார். இதுவரை வழக்கில் உதவி ஆணையர், மேயரின் உதவியாளர் உள்ளிட்ட 16 பேரை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேலும், பில் கலெக்டர்கள் உள்ளிட்ட 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தையும் கைது செய்தனர்.
தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மே மாதம் நீக்கப்பட்ட நிலையில், சென்னையில் வைத்து கைது செய்த போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் பொன்வசந்த் அனுமதிக்கப்பட்டார்.
Madurai,Madurai,Tamil Nadu
August 13, 2025 3:41 PM IST
[]
Source link







