
Last Updated:
TN Assembly | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் சுற்றுலா தளமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் – அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையின் மெரினாவாக மாரியம்மன் கோயில் தெப்பகுளம் இருப்பதாகவும், இங்கு லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் இளைஞராக இருப்பதாக கூறி இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது பதில் அளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் 20 லட்சம் பேர் இருப்பதாகவும், பொழுது போக்குவதற்கு எந்த அம்சம் இல்லை என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு எழுந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்று என்று நகைச்சுவையாக கூற சட்டப்பேரவையில் இருந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி குலுங்கி குலுங்கி சிரித்து ரசித்தனர்.
May 06, 2022 12:49 PM IST