
Last Updated:
Drug Rehabilitation Center :சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த மறுவாழ்வுமையத்தின் உரிமையாளர் சரணடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த மறுவாழ்வு மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, ராஜியை அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் ஊழியர்கள் ஏழு பேர் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
குறிப்பாக அந்த மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் வீடியோ கால் மூலம் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து கொலையை அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலை வழக்கில் ஊழியர்கள் A2 யுவராஜ்(38), A3 செல்வமணி(39), A4 சதீஷ்(29), A5 கேசவன்(42), A6 சரவணன்(45), A7 மோகன் (34), A8 பார்த்தசாரதி (23) ஆகிய 7 நபர்களை கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரான கார்த்திகேயனை தேடி வந்தனர். இந்நிலையில் போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் நேற்று மாலை கோவை நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

கார்த்திகேயன் சரணடைந்தார்
இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த மைய உரிமையாளர் கார்த்திகேயனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.