பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் பொன்முடி

Spread the love


Last Updated:

TN Assembly | பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை – அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடிஅமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் சட்டபேரவை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடம் உள்ளது. இதில் 1,28,000 இடம் நிரம்பியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருப்பதாகவும், வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை என்றும், சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியுடன் தான் செயல்பட முடியும் என்றும் அமைச்சர் பொன்முடி பேசினார்.



Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *