
Last Updated:
FDFS free tickets | பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு FDFS இலவச டிக்கெட் வேண்டுமா? ஓரியோ பிஸ்கட் வழங்குகிறது செம ஆஃபர்
பொங்கலன்று வெளியாகும் படங்களை FDFS முதல் நாள் முதல் காட்சியை இலவசமாக பார்க்க வேண்டுமா? இதற்கு ஓரியோ பிஸ்கட் ‘ப்ளாக் அண்டு ஒயிட்’ டிக்கெட் என்ற சூப்பரான ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் நாள்தோறும் தேர்வாகும் 200 போட்டியாளர்களுக்கு பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
பண்டிகை காலங்களில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்களை திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதிலும் குறிப்பாக பொங்கலையொட்டி வெளியாகும் படங்களுக்கு கொண்டாட்டம் கூடுதலாக இருக்கும். ஏனென்றால் மற்ற சீசனை விட பொங்கல் சீசனில் விடுமுறை அதிகம்.
கடந்த பொங்கலன்று விஜய் நடித்த வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகின. அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டேபோது ப்ளாக்கில் இந்த படங்களுக்கான டிக்கெட் ரூ. 1500 முதல் ரூ. 2ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை காட்சிகளுக்கு டிக்கெட் டிமாண்ட் அதிகம் காணப்பட்டது.
இந்த பொங்கலில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால் இந்த முறை ரசிகர்கள் இந்த படங்களை பார்க்க அதிகம் செலவு செய்ய வேண்டாம். ஏனென்றால் ஓரியோ பிஸ்கட் நிறுவனம் உங்களுக்காக இலவச டிக்கெட்டுகளை வழங்கவுள்ளது. அதில் தேர்வாகும் நபர் நீங்களாக கூட இருக்கலாம்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஓரியோ பிஸ்கட் மிகச்சிறந்த சுவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இந்த பிஸ்கட்டுகளை பாலில் மூழ்க வைத்து சாப்பிட்டாலும் சரி, சீஸ் கேக் மற்றும் வெறுமனே சாப்பிட்டாலும் சரி, உன்னதமான சுவையை ஓரியோ அளிப்பதற்கு தவறியதில்லை.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஓரியோ சூப்பரான ஆஃபரை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 45 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ப்ளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதற்கு எதிராக ஓரியோ விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ப்ளாக் அண்டு ஒயிட் டிக்கெட் என்ற சூப்பர் ஆஃபரை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது ஓரியோ.
பொங்கலையொட்டி வெளியாகும் கேப்டன் மில்லர் அயலான் படங்களை இலவசமாக நீங்கள் பார்க்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் அருகில் உள்ள BIG BASKET கடைக்கு சென்று பிரத்யேகமான ப்ளாக் அண்டு ஒயிட் ஓரியோ பிஸ்கட்டுகளை வாங்குங்கள்.
இலவச காட்சிகளுக்காக நாள்தோறும் 200 ரசிகர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவராக ப்ளாக் அண்டு ஒயிட் ஓரியோ பிஸ்கட்டை வாங்கிய நீங்களாகவும் இருக்கலாம். இந்த பிஸ்கட்டின் காலியான கவர்தான் படத்துடைய டிக்கெட். இந்த சலுகை பொங்கல் வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனே ப்ளாக் அண்டு ஒயிட் பிஸ்கெட்டை வாங்கி, பொங்கல் ரிலீஸ் படங்களை இலவசமாக பார்த்து மகிழுங்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Chennai,Chennai,Tamil Nadu
January 12, 2024 4:21 PM IST
பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு FDFS இலவச டிக்கெட் வேண்டுமா? ஓரியோ பிஸ்கட் வழங்குகிறது செம ஆஃபர்