Last Updated:
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
இந்தப் படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் ராஜமவுலி அறிவித்துள்ளார். டீசரை பொறுத்தவரை உலகின் ஆதி நாகரீகங்கள் காட்டப்படுகின்றன. இறுதியில் வாரணாசி என்ற பெயர் இடம்பெற மகேஷ் பாபு இன்ட்ரோ கொடுக்கிறார்.
காவி கொடி, ராமர் ரெஃபரன்ஸ் என வாரணாசியை மையப்படுத்திய புராணங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகும் என தெரிகிறது. மேலும் பிருத்விராஜின் கதாபாத்திரம் மூலம் இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் எனவும் தெரிகிறது.
November 15, 2025 9:58 PM IST
[]
Source link







