
Last Updated:
திருவிடைமருதூர் கோயிலில் அனுமதியின்றி வேட்டுவம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக வழக்கு, இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோயிலில், உரிய அனுமதியின்றி வேட்டுவம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு, திருவிடைமருதூர் கோயிலில் 4 நாட்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மனு குறித்து, மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ’தங்கலான்’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ‘கெத்து’ தினேஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் காட்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் குடும்பத்துக்கு பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். முன்னதாக சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
July 23, 2025 9:58 PM IST
[]
Source link