Last Updated:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி பாகிஸ்தானை ஆதரிப்பதில் ஆர்வம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
“பாகிஸ்தானை ஆதரிப்பதில் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் அதிக ஆர்வம் காட்டுவதால், விவாதத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். இந்தியாவின் எதிர் சக்திகளுக்கு உதவுவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க கருத்தை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களவை காலையில் கூடியதும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாகவும் டிரம்ப் கூறியது குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அனைத்து விவகாரங்களுக்கும் அரசு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர், அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனினும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவை கூடிய பிறகும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கூட்டத்தொடரின் முதல் நாளே அவையை முடக்குவது ஏற்புடையதல்ல என்றார். பிற்பகல் 2.30 மணிக்கு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்தொடரில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிப்பது என்று முடிவு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. இதன்காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நாடாளுமன்றம் என்பது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட வரவேற்பு அறை அல்ல. அனைவரும் விதிகளுக்கு உட்பட்டவர்களே, நாங்கள் சபையை நடத்த விரும்புகிறோம்.
#WATCH | Delhi: Union Minister Dharmendra Pradhan says, “We want to run the House… This is not the personal drawing room of Rahul Gandhi and Priyanka Gandhi. Everyone will have to stay within the rules. They are themselves running away from the discussion, because they are more… pic.twitter.com/DvBgfHywPQ
— ANI (@ANI) July 21, 2025
பாகிஸ்தானை ஆதரிப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், விவாதத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். இந்தியாவின் எதிர் சக்திகளுக்கு உதவுவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் அவர்கள் பாராளுமன்றத்தில் பொறுப்புடன் பேச விரும்பவில்லை. அவர்கள் எந்த தலைப்பில் விவாதங்களை நடத்தினாலும் அதற்கு பதில் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
July 21, 2025 3:11 PM IST
“பாகிஸ்தானை ஆதரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் ராகுல், பிரியங்கா” – மத்திய அமைச்சர் பகிரங்க கருத்து
[]
Source link







