
Last Updated:
நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான ‘பரதேசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ரித்விகா. அடுத்து ஆண்டு வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் அவருக்கான அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. இந்தப் படத்துக்காக சிறந்த துணை கதாபாத்திரத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.
2016-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ உள்பட 6 படங்களில் நடித்தார். அண்மையில் அவர் நடிப்பில் ‘லெவன்’, ‘டிஎன்ஏ’ படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார் ரித்விகா. இந்நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “கைத்தலம் பற்ற” என குறிப்பிட்டு, தனது வருங்கால கணவரான வினோத் லட்சுமணனை டேக் செய்துள்ளார். முகத்தை காட்டாதபடி, நிச்சயதார்த்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் ரித்விகா பகிர்ந்துள்ளார்.
திருமண வாழ்வில் இணையவுள்ள ரித்விகாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரித்விகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
July 13, 2025 9:18 PM IST
[]
Source link